TECHNOLOGY

கம்மி விலையில் 48MP செல்பி + 5000 mAh பேட்டரி சூப்பர்

டெக்னோ கேமன் 17 சீரிஸ் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளது. இந்த நிறுவனம் அமேசானில் ஒரு பிரத்தியேக டீசர் பக்கத்தை வெளியிட்டுள்ளது.

இதில் வெளியான டீசர்கள் இந்தியாவில் டெக்னோ கேமன் 17 ப்ரோ மற்றும் டெக்னோ கேமன் 17 மாடல்களை நிறுவனம் அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மே மாதம் நைஜீரியாவில் முதன்முதலில் வெளியிடப்பட்டன, இப்போது இந்திய சந்தைகளில் அறிமுகபடுத்த உள்ளன.

டெக்னோ கேமன் 17 ப்ரோ இது மீடியாடெக் ஷீலியோ ஜி 95 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 48 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. டெக்னோ கேமன் 17னின் விலை ரூ.14,200 மற்றும் டெக்னோ கேமன் 17 ப்ரோ வின் விலை 24,100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button