SOCIAL

பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.. செப்டம்பரில் பிக் பாஸ் சீசன் 5 !

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களில் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூனில் துவங்கப்பட்ட அக்டோபரில் முடிவடைவது வழக்கம். கொரோனா பிரச்சனை கடந்த நான்காவது சீசன் 2020 செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் துவங்கியது. அதனால் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் இந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி வரும் செப்டம்பர் முதல் அதற்கான சூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அட்வான்ஸ் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை நிகழ்ச்சி ஏன் துவங்க படாமல் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button