MARKETS
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்..!
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை. உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயராது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. சென்னையில் இன்றைய பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 101.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனைத் தொடர்ந்து டீசலின் விலையும் 91.43 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.