CINEMA
நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கு.. அபராதம் வசூலிக்க தடை..!
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் வசூலிக்க நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவின் விசாரணை முடியும் வரை அபராதம் குறித்து அவரிடம் வணிகவரித்துறை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்தார். இதனையடுத்து அவர் நுழைவு வரி கெட்ட மறுத்ததாகவும் அதன் பிறகு தாமதமாக கட்டியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை அவரிடமிருந்து அபராதம் வசூலிக்க நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு இடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடியும் வரை நடிகர் விஜய்யிடம் இருந்து அபராதம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த மனு விசாரணைக்கு வரும் வரை அபராதம் பெறுவது குறித்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.