CINEMA
ஸ்கூட்டர் விபத்தில் பிக் பாஸ் பிரபலம் காயம்..!
பிரபல கன்னட நடிகை திவ்யா சுரேஷ் கன்னட பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்தது. திடீரென்று பிரேக் போட்டதால் நிலைகுலைந்த திவ்யா சுரேஷ் கீழே விழுந்த விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது கை, கால், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திவ்யா சுரேஷ். ” சிறிய விபத்தில் சிக்கி இருக்கிறேன் இதனால் சில காலம் இன்ஸ்டாகிராம் பக்கம் வர இயலாது. தொடர்ந்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்