SOCIAL
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம்.. 7 மாவட்டத்திற்கு எச்சரிக்கை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர பகுதிகளில் சில மாவட்டங்களில் வேகமான காற்றும் கனமழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 9ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.
அதற்குப் பிறகு சில நாட்கள் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் கடலூர் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.