SOCIAL
IBPS Clerk Recruitment 2022 | வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personal Section) தற்பொழுது இந்தியா முழுவதும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Common Requirement Process for Requirement of Clerks பணிக்காக அறிவிக்கப்பட்டது.
இந்த பணிக்கு மொத்தம் 6305 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம்.
01.07.2022 முதல் 21.07.2022 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இதைப் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள www.ibps.in என்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.
கல்வி தகுதி:
● அனைத்து பட்டதாரிகளும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
● குறைந்தபட்சம் 20 வயது முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Online Preliminary & Online Main Examination, Certificate Correction Process
விண்ணப்ப முறை :
● ஆன்லைன்(Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
● SC/ ST / PWBD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.175/- செலுத்த வேண்டும்.
● மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.850/- செலுத்த வேண்டும்.
● இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
1. முதலில் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
5. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.