SOCIAL

TNHRCE Recruitment 2022 Tamilnadu | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு முதல்வர், இளநிலை உதவியாளர், கணினி இயக்குபவர் போன்ற பணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணிகளுக்கு 3 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 01.08.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 

● முதல்வர் பணிக்கு முதுகலை ஆசிரியராக பத்தாண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
● இளநிலை உதவியாளர் பணிக்கு 10 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
● கணினி இயக்குபவர் பணிக்கு தட்டச்சு துறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி

● முதல்வர் பணிக்கு குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தி அடைந்தவாரகவும், அதிகபட்சம் 60 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
● இளநிலை உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை:

அஞ்சல்(Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: 

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணிகை, திருத்தணிகை வட்டம் , திருவள்ளூர் மாவட்டம் -631 209.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button