CINEMA

விபத்தில் சிக்கிய சின்னத்திரை தொகுப்பாளினி மணிமேகலை..!

தனியார் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் மணிமேகலை. இவரது கணவர் ஹூசைன். இவர்கள் இருவரும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

அதுமட்டுமில்லாமல் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி உள்ளார்கள். அந்த கார் குறித்த விவரங்களை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக்கூடாது என்பதற்காக அந்த காரில் சமீபத்தில் ஒரு ட்ரிப் சென்றுள்ளார்கள். அப்போது லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் மணிமேகலை மற்றும் அவரது கணவர் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை. கார் சேதம் அடைந்து உள்ளது. இதனை காணொளியாக மணிமேகலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிமேகலை 2017 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button